சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையினரைக் கண்டித்தும்,  தமிழகம், காரைக்கால் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் புதுச்சேரியில் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பினர் செயலர் மங்கையர்ச்செல்வன் தலைமை வகித்தார். இதில்,  70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்திய கடற்படையினரைக் கண்டித்தும் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai