சுடச்சுட

    

    வாக்குச் சாவடிகளில் உள்ளாட்சித் துறைச் செயலர் ஆய்வு

    By DIN  |   Published on : 14th October 2017 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை உள்ளாட்சித் துறைச் செயலர் பி.ஜவஹர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யும் பணிகள் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி  தொடங்கியது. இந்தப் பணிகள் அக்டோபர் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இதற்கென தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அலுவலர்களின் செயல்பாடுகள்,  வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அலுவலர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து உள்ளாட்சித் துறைச் செயலரும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஜவஹர் பல்வேறு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai