சுடச்சுட

  


  வில்லியனூர் அருகே இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
  வில்லியனூரைச் சேர்ந்தவர் ராஜா (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் தனம் (29). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொண்டு காலாப்பட்டில் வசித்து வந்தனர்.
  அங்குள்ள தனியார் கம்பெனியில் ராஜா பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ராஜாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில்லாமல் போய்விட்டதாம். அதே சமயம் இரு தரப்பு பெற்றோரும் இவர்களை வந்து பார்ப்பதும் இல்லை, கஷ்டத்துக்கு உதவவுமில்லையாம். இதனால், மனமுடைந்த ராஜா வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மண் சரிந்து இளைஞர் சாவு
  வில்லியனூர் அருகே மண் சரிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
  உத்திரவாகினிபேட்டையைச் சேர்ந்தவர் முருகவேல் (20). இவர், தனக்குச் சொந்தமான மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பனை செய்வதற்காக ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஹரி (20) என்பவருடன் வெள்ளிக்கிழமை சென்றார்.
  அப்போது, ஆற்றில் குகை போன்று ஆழமாகத் தோண்டிய பகுதியில் ஹரி உள்ளே சென்று மணலை அள்ளிக் கொடுக்க, முருகவேல் வெளியே இருந்து மணலை பெற்று வண்டியில் ஏற்றியுள்ளார்.
  இந்த நிலையில், திடீரென மணல் சரிந்து விழுந்தது. இதனால், ஹரி உள்ளே சிக்கிக் கொண்டார். அங்கிருந்தவர்கள் ஹரியை மீட்டு, வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஹரி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
  இதுகுறித்து வில்லியனூர் காவல் உதவி ஆய்வாளர் வேலய்யன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  பைக் மீது லாரி மோதல்: அரிசி வியாபாரி சாவு
  வில்லியனூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் அரிசி வியாபாரி உயிரிழந்தார்.
  விழுப்புரம் மாவட்டம், கமலா நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபு (31). அரிசி வியாபாரி. இவர், புதுச்சேரி, கடலூரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்து வருகிறார்.
  இந்த நிலையில், விநியோகம் செய்த அரிசிக்குரிய பணத்தை வசூல் செய்வதற்காக சனிக்கிழமை பைக்கில் திருபுவனைக்கு வந்தார். அங்குள்ள அரிசிக் கடையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து கடலூருக்கு பைக்கில் சென்றார். மதகடிப்பட்டு பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.
  இதில், நிலைத் தடுமாறி கீழே விழுந்த பிரபுவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து
  விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai