சுடச்சுட

  

  லாட்டரிச் சீட்டு விற்ற 2 பேர் கைது: ரூ. 8.85 லட்சம் பறிமுதல்

  By DIN  |   Published on : 15th October 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிச் சீட்டுகளை விற்ற 2 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 8.85 லட்சம் ரொக்கம், இரு செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்.
  மேட்டுப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்று போலீஸார் சோதனை செய்ததில் 3 இலக்க எண் கொண்ட கேரள லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
  இதையடுத்து, லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த தட்சிணாமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வேல்ராம்பட்டைச் சேர்ந்த கதிர்வேல் (எ) நடராஜன், சாரம் பகுதியைச் சேர்ந்த முனியன் ஆகிய இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
  இதையடுத்து, எஸ்.பி. ரச்சனா சிங் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தங்கமணி, சிறப்புக் காவல் படை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர்.
  இந்த நிலையில், வேல்ராம்பட்டு அருகே சனிக்கிழமை நடராஜனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 8.85 லட்சம் ரொக்கம், இரு செல்லிடப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
  மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முனியனை போலீஸார் தேடி வருகின்றனர். சிறப்பாகச் செயல்பட்டு லாட்டரி விற்பனை செய்த நபர்களைப் பிடித்த போலீஸாரை முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் பாராட்டினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai