சுடச்சுட

  

  விவசாயிகள் மீது தடியடி: அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

  By DIN  |   Published on : 15th October 2017 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் அனுப்பி, அதன் நிலுவைத் தொகையைக் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல் துறைக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக் குழு கண்டனம் தெரிவித்தது.
  இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் பிரதேச செயலர் வி.சங்கர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தொடர்ந்து 2011 முதல் கரும்புக்கான நிலுவைத் தொகையைத் தரவில்லை. இது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் தொடர்கதையாக உள்ளது.
  கடந்த ஆண்டு (2016 - 17) வெட்டி அனுப்பிய கரும்புக்கு ஆலை நிர்வாகம் ரூ. 7 கோடி நிலுவை வைத்துள்ளது. தொடர்ந்து, விவசாயிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டங்களில் ஈடுபட்டும் நிலுவைத் தொகையைக் கேட்டு வருகின்றனர்.
  மாநில அமைச்சரும் அவ்வப்போது உடனே நிலுவைத் தொகை வழங்கப்படும் எனக் கூறி வந்தார். தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட சூழ்நிலையில், கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகள் தங்களது நிலுவைத் தொகையை கேட்டுப் போராடினால் அரசு காவல் துறையை ஏவி அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.
  இந்த நடவடிக்கையை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மேலும், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் சீர்கேடு, முறைகேடு, ஊழல்கள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும், தனியாருக்கு ஆலையைத் தாரை வார்க்கும் அரசின் முடிவை எதிர்த்தும் அனைத்து விவசாயிகளும், கிராமப்புற உழைப்பாளிகளும், ஆலைத் தொழிலாளர்களும் இணைந்து போராட முன்வர வேண்டும்
  என்றார் சங்கர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai