Enable Javscript for better performance
விவசாயிகள் மீது தடியடி: நடவடிக்கை கோரி திருக்கனூர் காவல் நிலையம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் மீது தடியடி: நடவடிக்கை கோரி திருக்கனூர் காவல் நிலையம் முற்றுகை

    By DIN  |   Published on : 15th October 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவு சர்க்கரை ஆலையைப் பாதுகாக்க வலியுறுத்தி, போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை திருக்கனூர் காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
    லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி விவசாயிகள் டிபிஆர். செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் திடீரென தடியடி நடத்தியதில் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தது. 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலத்த காயமடைந்தனர். எம்.எல்.ஏ. மற்றும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    இந்த நிலையில், சனிக்கிழமை விவசாயிகள் திருக்கனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
    இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் குமார் மற்றும் போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகவலறிந்து டிபிஆர். செல்வம் எம்.எல்.ஏ. அங்கு வந்து தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுச்சேரி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம் எனக் கூறினார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai