சுடச்சுட

  

  தெற்கு மாநில திமுக இளைஞர் அணி சார்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
   அண்ணா பிறந்த நாள் போட்டிகள், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
   இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கதிரவன், வெங்கடாஜலபதி, ஆரோக்கியராஜ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சுப. சந்திசேகரன் போட்டிகளை தொடக்கி வைத்தார்.
   இலக்கிய அணி துணைச் செயலாளர் ஈரோடு இறைவன் தலைமை நடுவராக இருந்து போட்டியை நடத்தினார். ஒருங்கிணைப்பாளராக சீனு. மோகன்தாஸ் மற்றும் நடுவர் குழு நெறியாளர்களாக சீனு. வேணுகோபால், பொறியாளர் பாலசுப்பிரமணியன், வேல்முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நடுவர்களாக இருந்து கட்டுரை, கவிதை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டிகளில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர்.
   உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், பாகூர், நெட்டப்பாக்கம், மங்கலம், வில்லியனுர், உழவர்கரை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுகளில் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
   மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் புத்தகப்பை, நோட்டுகள், அட்டை, எழுதுபொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
   துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், சக்திவேல், அருட்செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, டாக்டர் மாயக்கிருஷ்ணன், பாகூர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai