Enable Javscript for better performance
அறிவியல் மையத்தில் சூரிய ஒளி மின்னழுத்த நிலையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அறிவியல் மையத்தில் சூரிய ஒளி மின்னழுத்த நிலையம் திறப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 16th October 2017 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கில் சூரிய ஒளி மின்னழுத்த நிலையம் திறக்கப்பட்டது.
     அறிவியல் மையத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு, அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
     மேலும், புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றத்தின் ரூ.14 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சூரிய ஆற்றலில் இயங்கும் ஒளி மின்னழுத்த நிலையத்தையும் அமைச்சர் கந்தசாமி திறந்து வைத்தார்.
     அறிவியல் அலுவலர் ஸ்ரீனிவாச ராவ், தொழில்நுட்ப உதவியாளர் சதீஷ்குமார், சிவக்குமார், இளநிலை அறிவியல் உதவியாளர் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     இதைத் தொடர்ந்து, அறிவியல் மைய கருத்தரங்க கூடத்தில் "கேளிக்கை அறிவியல்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர் சண்முகம் கலந்து கொண்டு, "கேளிக்கை அறிவியல்' குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஆலடிமேடு, பனித்திட்டு பகுதி மக்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai