சுடச்சுட

    

    கடன் தொல்லை: மகள்கள், மகனுடன் தாய் தற்கொலை முயற்சி

    By    புதுச்சேரி,  |   Published on : 16th October 2017 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடன் தொல்லை தாளாமல் 2 மகள்கள், ஒரு மகனுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     நெட்டப்பாக்கம் அடுத்துள்ள கல்மண்டபம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பொன்னம்பலம். இவரது மனைவி விஜயகுமாரி (40). இவர்களுக்கு அம்பிகா(17), ஆர்த்தி(14), மகன் விஷ்ணு(13) ஆகிய குழந்தைகள் உள்ளனர். பொன்னம்பலம் சொந்தமாக கார் வாங்குவதற்காக பல பேரிடம் அதிகளவு கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
     ஆனால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லையாம். இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதன் விளைவாக கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
     இந்த நிலையில், சனிக்கிழமை பொன்னம்பலம் தொழில் விஷயமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து பணத்தைக் கேட்டுள்ளனர். இதனால் மனம் உடைந்த விஜயகுமாரி, மகள்கள், மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
     இதற்காக வீட்டில் 4 பேரும் தனித் தனியாக கயிறு மாட்டி தூக்குபோட்டுக் கொண்டனர். அப்போது மகன் விஷ்ணு தப்பிச் சென்று அக்கம் பக்கத்தினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.
     இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயகுமாரி உள்ளிட்ட மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இது குறித்து நெட்டப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai