சுடச்சுட

  

  டெங்கு பாதிப்பு: செயலிழந்த நிலையில் மாநில அரசு பாஜக குற்றச்சாட்டு

  By  புதுச்சேரி,  |   Published on : 16th October 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டெங்கு பிரச்னையில் புதுவை மாநில காங்கிரஸ் அரசு செயலிழந்து விட்டது என பாஜக மாநில பொதுச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் புகார் தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
   புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதுவரை பல உயிர்கள் பறி போய் உள்ளன. இந்தக் காய்ச்சலை தடுக்க முறையான அவசர நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாததால் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரத் துறை செயலாளர் பதவி நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதற்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். உயிரிழப்புகள் மேலும் ஏற்படுவதைத் தவிர்க்க சுகாதாரத் துறை செயலாளர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையேல் செயலிழந்து கிடக்கும் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எதிராக விரைவில் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai