சுடச்சுட

  

  தீபாவளி பண்டிகை: சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

  By  புதுச்சேரி,  |   Published on : 16th October 2017 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sunday_market

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சண்டே மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக குவிந்தனர்.

  வரும் 18-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  இதற்காக பொதுமக்கள் பட்டாசு, புத்தாடைகள், இனிப்புகளை வாங்குவதற்காக முக்கிய கடை வீதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் குவிந்துள்ளனர்.

  அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் சண்டே மார்க்கெட் பிரசித்தி பெற்றதாகும்.

  700 கடைகளுக்கு மேல் சண்டே மார்க்கெட்டில் உள்ள நிலையில், இங்கு அனைத்து வகையான பொருள்கள், ஆடைகளை குறைந்த விலையில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். பேரம் பேசி வாங்க ஏதுவாக உள்ள இடம் ஆதலால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். தற்போது தீபாவளியையொட்டி சண்டே மார்க்கெட் உள்ள காந்தி வீதி முழுவதும் வெறும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டன.

  வெயில் இல்லாமல் வானிலையும் குளிர்ச்சியாக இருந்ததால், பொதுமக்கள் உற்சாகத்துடன் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai