சுடச்சுட

  

  மத்திய பூச்சியியல் நோய் ஆராய்ச்சி நிலையம் மீது நாராயணசாமி புகார்

  By  புதுச்சேரி,  |   Published on : 16th October 2017 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் உள்ள மத்திய பூச்சியியல் நோய் ஆராய்ச்சி நிலையம் மாநில அரசுக்கு எந்த ஒத்துழைப்பையும் தருவதில்லை என டெங்கு தொடர்பான மத்திய ஆய்வுக் குழுவிடம் முதல்வர் நாராயணசாமி புகார் தெரிவித்தார்.
   மேலும், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த ரூ.30 கோடி முதல்கட்டமாக நிதி வழங்கவும் கேட்டுக் கொண்டார்.
   தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழு புதுவையிலும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தது.
   காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிட்ட மத்தியக் குழுவினர், நோய்த் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். பின்னர் இரவு சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
   பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   புதுவையில் டெங்கு பாதிப்பை குறைக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மத்தியக் குழுவிடம் எடுத்துக் கூறினோம். அவர்களும் சில அறிவுரைகளை வழங்கினர். அவற்றை மாநில அரசு கவனத்தில் கொள்ளும். அதிக நோய்த் தாக்கம் ஏற்பட்டுளள ரெட்டியார்பாளையம் ஜெ.ஜெ. நகர், சாமிப்பிள்ளைத் தோட்டம் பகுதிகளில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நோயாளிகளுக்கு தரப்படும் சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டினர்.
   முதல் கட்டமாக ரத்த தட்டணுக்கள் சேகரிக்கும் கருவிகள் 5 தர வேண்டும் எனவும், ரூ.30 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என ஏற்கெனவே மத்திய அமைச்சர் நட்டாவிடம் கடிதம் அளித்துள்ளேன்.
   கோரிமேட்டில் உள்ள மத்திய பூச்சியியல் நோய் ஆராய்ச்சி நிலையம் டெங்கு, சிக்குன்குன்யா நோய் ஆய்வுகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்கிறது. ஆனால், அதன் முடிவுகளை மாநில அரசுடன் பகிர்ந்து கொள்வதில்லை. இந்த நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற ஆலோசனையும் வழங்குவதில்லை. கொசு ஒழிப்பு தொடர்பாக மாநில அரசுக்கு எந்தவித ஒத்துழைப்பும் தருவதில்லை. இதுதொடர்பாக மத்திய குழுவிடம் புகார் செய்துள்ளோம் என்றார்.
   உடனிருந்த மத்தியக் குழுத் தலைவர் கல்பனா பரூவா கூறுகையில்,புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்துள்ளோம்.
   பல்வேறு மருத்துவமனைகள், அதிக நோய்த் தாக்கம் உள்ள பகுதிகளை பார்வையிட்டோம். மேலும், அரசின் அனைத்துத் துறைகளும் சீராக இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இதுதொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் தரப்படும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai