சுடச்சுட

  

  உலக மன நல தினத்தை முன்னிட்டு புதுச்சேரி முதல் தில்லி வரை மோட்டார் சைக்கிள் மூலம் செல்லும் விழிப்புணர்வுப் பேரணியை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
   உலக மன நல தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உளவியல் சங்கம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் புதுச்சேரி முதல் தில்லி வரை விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.
   கடற்கரை சலை காந்தி சிலை அருகே ஆளுநர் கிரண் பேடி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் 16 பேர் கொண்ட குழு பல்வேறு மாநிலங்கள் வழியாக தில்லி செல்கின்றனர். வழிநெடுக பொதுமக்களுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai