சுடச்சுட

  

  டெங்கு இல்லா தீபாவளி: சுகாதாரத் துறையினருக்கு ஆளுநர் அறிவுரை

  By DIN  |   Published on : 18th October 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் மக்கள் டெங்கு இல்லாத தீபாவளியைக் கொண்டாட சுகாதாரத் துறையினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடிஅறிவுறுத்தினார்.
  புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி பல்வேறு துறைகளுக்கு நேரில் சென்று ஊழியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை அவர், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள், ஊழியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
  கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ராமன் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.
  அப்போது பேசிய துணை நிலை ஆளுநர், புதுச்சேரியில் டெங்கு அதிகமாக பரவி வருகிறது.
  டெங்கு இல்லாத வகையில் நாம் பணியாற்ற வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருந்தால் டெங்கு இல்லாத தீபாவளியாக இருக்கும். சுகாதாரத் துறையினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
  அதே போல காவல் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவு, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து துறை ஊழியர்களுக்கும் கிரண் பேடி வாழ்த்து தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai