சுடச்சுட

  

  நெல்லித்தோப்பு பகுதியில் மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
  தலைமை ஆசிரியர் பாஸ்கரராசு பேரணியைத் தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் கிருஷ்ணராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிமொழி டெங்கு காய்ச்சல் ஏற்படும் விதம், பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நெல்லித்தோப்பு, பெரியார் நகர் வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். சுகாதார ஆய்வாளர்கள் மதிவாணன், தமிழன்பன், ஆசிரியர்கள் அமலோற்பவமேரி, மேரி மார்க்கிரெட், மதனகோபால், பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai