தொழில் நிறுவனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அறிவுறுத்தல்
By DIN | Published on : 18th October 2017 12:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் நீர் தேங்கியிருப்பதை தடுக்க வேண்டும் என புதுவை மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலாளர் துவாரகநாத் அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் அனைத்துத் தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் தங்கள் வளாகத்திற்குள் எந்தப்பகுதியிலும் நீர் தேங்கி வைத்திருக்கக்கூடாது, இதற்காக ஊழியர்களைக் கொண்டு துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
வாரத்துக்கு ஒரு முறையாவது இந்தத் துப்புரவுப் பணி நடைபெற வேண்டும், துப்புரவுப் பணி செய்வது குறித்து புகைப்படங்களை எடுத்து மாசுக்கட்டுப்பாட்டு குழும இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தொழிலாளர்கள், அலுவலர்களையும் தங்களது வீடுகளில் இதுபோன்ற துப்புரவுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
தூய்மைப்பணிக்காக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழு உங்களது நிறுவனத்தை ஆய்வு செய்யும், அப்போது கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது தெரியவந்தால் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.