சுடச்சுட

  

  புதுச்சேரியில் அதிமுகவின் 46-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
  எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாநில நிர்வாகிகள் சுத்துக்கேணி பாஸ்கர், கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, நகர செயலர்கள் ரவீந்திரன், அன்பானந்தன், ஞானவேல், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
  இதே போல நெல்லித்தோப்பு லெனின் விதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார். அண்ணா, எம்.ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  பின்னர் புதிய பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார்.
  சாதாரண தொண்டனையும் கோட்டைக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் இணைந்து இரட்டை இலையை மீட்டுத் தருவர்.
  வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் காசிலிங்கம், முன்னாள் எம்.பி.ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, நிர்வாகிகள் கோவிந்தம்மாள், இந்திரா முனுசாமி, வெரோனிக்கா, நந்தன், உள்பட பலர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai