சுடச்சுட

    

    புதுச்சேரி பல்கலை. மாணவர் பேரவை புதிய நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

    By DIN  |   Published on : 18th October 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மாணவர் அணியைச் சேர்ந்த தலைவர் நர்மதா தலைமையிலான குழுவினர் சென்னையில்  திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை திங்கள்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
    புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தல் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.   இதில் பல்கலைக்கழக மாணவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக மாணவர் அணியை சேர்ந்த மாணவி நர்மதா வெற்றி பெற்றார்.
    துணைத் தலைவர் பதவிக்கு இலக்கியா, விக்னேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக பாலமுருகன், இணைச் செயலாளர் திலீப் அப்துல் கலாம், செயற்குழு உறுப்பினர்களாக அன்பரசு, கோகுல் சுந்தர், குணாளன், கனிமொழி, ஷில்பா சுன்னி, ஷில்பா கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பல்கலைக் கழக வரலாற்றில் திமுக-வை சேர்ந்தவர் முதல் முறையாக தலைவராக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பேரவைத் தலைவர் நர்மதா தலைமையிலான குழுவினர் தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ., தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பல்கலைக் கழக பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
    துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், தொகுதி செயலாளர் சக்திவேல், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai