Enable Javscript for better performance
புதுவை ஆட்சி நிர்வாகத்தை காக்க தேசிய மீனவர் பேரவை கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுவை ஆட்சி நிர்வாகத்தை காக்க தேசிய மீனவர் பேரவை கோரிக்கை

    By DIN  |   Published on : 18th October 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநில மக்கள் மற்றும் அரசைக் காக்க ஏதுவாக தகுதியான ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ கோரியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் புதிய அரசு, துணை நிலை ஆளுநர் பொறுப்பேற்ற கடந்த 16 மாதங்களாக ஆட்சி நிர்வாகம் முறையாக செயல்பட முடியாத ஒரு அசாதாரண சூழ்நிலை நீடித்து வருகிறது. உயர் அதிகாரிகளும், இரண்டாம் நிலை அதிகாரிகளும் செய்வது அறியாமல் குழம்பிப்போய் உள்ளனர். குறிப்பிட்ட அமைச்சர்களின் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டாம். செலவினங்களை அனுமதிக்க வேண்டாம்  என்று மாநில அரசு நிதித்துறை செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு பகிரங்கமாக கூறப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குரிய திட்டங்களில்  பலன் உரிய நேரத்தில் கிடைக்காமல் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலை நீடிப்பது மக்களாட்சி தத்துவத்தையே சீர்குலைப்பதாகும்.
    எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முறையாக செயல்பட அனுமதிக்குமாறு துணை நிலை ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும்.  புதுச்சேரி மாநிலத்தில் சுமுகமான சூழலில் ஆட்சி நிர்வாகம் நடைபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசு உள்துறை அமைச்சகத்திடமும், குடியரசுத் தலைவரின் கையில் தான் உள்ளது.
    எனவே, தாங்களும், மத்திய அரசும் தகுதியான வேறு ஒருவரை புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக நியமித்து புதுச்சேரி அரசையும், மக்களையும் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இளங்கோ.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai