சுடச்சுட

  

  அரசு மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு

  By  புதுச்சேரி,  |   Published on : 20th October 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதல்வர் நாராயணசாமி வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
   புதுவை சட்டப் பேரவை வளாகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த முதல்வர் வி.நாராயணசாமி, தனது பணிகளுக்கு இடையே திடீரென வெளியே வந்து, அருகே உள்ள அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள், உள் நோயாளிகள், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றவர், அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
   மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக கவனிக்கிறார்களா, நேரத்துக்கு வருகிறார்களா என்றும் அவர்களிடம் கேட்டறிந்தார். சிகிச்சை நிலவரங்கள் குறித்து, அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரித்தார். சில பிரிவுகளை மட்டுமே பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி, அங்கிருந்து மீண்டும் சட்டப் பேரவை அலுவலகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
   ஆய்வின் போது, அமைச்சர் கந்தசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai