சுடச்சுட

  

  பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

  By  புதுச்சேரி,  |   Published on : 20th October 2017 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கெüசிக பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமைத் தொடங்கியது.
   புதுச்சேரி கௌசிக பாலசுப்பிரமணியர் கோயிலில் 65-ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பாலசுப்பிரமணியரை தரிசித்தனர். தொடர்ந்து, 17 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் 6-ஆம் நாளான அக்.25-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தேரோட்டத்துடன் விமரிசையாக நடைபெற உள்ளது.
   தொடர்ந்து, 7-ஆவது நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சமபந்தி போஜனம் நடைபெறும். திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அதனைத் தொடர்ந்து சுவாமி உட்புறப்பாடும் நடைபெறும்.
   முக்கிய விழாவான கிருத்திகை வரும் நவ.5ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர்கள் ஞானசேகர், ராஜேஷ்குமார், காதர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
   கெüஸ் என்ற இஸ்லாமியர் முருகன் மேல் கொண்ட பற்றுதலால் இக்கோயிலை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai