சுடச்சுட

  

  புதுவை அரசின் ரூ.100 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்

  By  புதுச்சேரி  |   Published on : 20th October 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அரசின் ரூ.100 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் விடப்படுகின்றன.
   இதுகுறித்து புதுச்சேரி நிதித் துறைச் செயலர் கந்தவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுவை அரசின் மொத்தம் ரூ.100 கோடி மதிப்புள்ள 11 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய அரசு முன்வந்துள்ளது. இந்த பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதன் பிறகு ரூ.10 ஆயிரத்தின் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் அக்டோபர் 24-ஆம் தேதி இந்த ஏலத்தை நடத்தும்.
   ஆர்வமுள்ளவர்கள், நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் முதலியன ஓர் கூட்டுப் போட்டியில்லா ஏலத்தை அவரை சார்ந்த அனைத்து கூறுகளுக்கும் மின்னணு முறையில் பேசி, முடிவு செய்த இந்திய ரிசர்வ் வங்கியின் உட்பிரிவு வங்கியில் தீர்வு மூலம் மும்பை கோட்டையில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதள முகவரியில் அக்.24ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
   போட்டி ஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினர்கள் மின்னணு முறையில், அக்.24 மதியம் 12 மணிக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்தின் முடிவுகள் 24-ஆம் தேதி மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தனது இணையதள முகவரியில் வெளியிடும்.
   ஏலம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணைய பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசர்வ் மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளர் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை அக்25ஆம் தேதி வங்கி பணி நேரம் முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரசு பிணைய பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படக் கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை, அதாவது ஏப்ரல் 25 மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இந்த பிணைய பத்திரங்கள் மாற்றி கொடுக்கத்தக்கத் தகுதியுடையதாகும் என்று அதில் தெரிவித்துள்ளார் நிதித் துறைச் செயலர் கந்தவேலு.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai