Enable Javscript for better performance
பேருந்து உரிமையாளர்களுக்கு சாதகமான நடவடிக்கை: அதிமுக கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து உரிமையாளர்களுக்கு சாதகமான நடவடிக்கை: அதிமுக கண்டனம்

    By  புதுச்சேரி,  |   Published on : 20th October 2017 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலத்தில் பேருந்து உரிமையாளர்களுக்கு சாதகமாக, பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
     இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு பேருந்துக் கட்டணத்தை 75 சதவீதத்தில் இருந்து 90 சதவீத அளவுக்கு பல்வேறு நிலைகளில் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வாக்களித்த மக்களுக்கு தீபாவளி பரிசை வழங்கியுள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி.
     பேருந்து கட்டண உயர்வு தேவையான ஒன்றாக இருந்தாலும், அரசு, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்த போது சட்டப்பேரவை உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பினரின் கருத்துகளைக் கேட்டு பொதுமக்களுக்கும், ஆட்டோ உரிமையாளர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
     ஆனால், தற்போது தான்தோன்றித்தனமாக இந்த பேருந்து கட்டண உயர்த்தி அறிவித்திருப்பதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. 10 கிலோ மீட்டருக்கு ரூ.4.50 இருந்ததை 6 கிலோ மீட்டருக்கு ரூ.8 ஆகவும், ஒவ்வோரு கிலோ மீட்டருக்கும் 75 பைசா வீதமும் உயர்த்தியுள்ளனர். எவ்வித திட்டமிடலும் இல்லாமல் உள்நோக்கத்தோடு பேருந்து உரிமையாளர்களுக்கு சாதகமாக இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. பொது மக்களை பாதிக்கக் கூடிய இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு, காங்கிரஸ் அரசின் அமைச்சரவை தங்களின் சுயநலத்திற்காக உயர்த்தப்பட்ட கட்டண உயர்வுக்கு, ஆளுநர் கிரண் பேடி எந்தவித கருத்தும் கேட்காமல் ஒப்புதல் அளித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
     ஆளும் அரசுக்கு மக்களைப் பற்றி சிறிதளவு கூட கவலை இல்லை. உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைக்க வேண்டும். ஆளுநர் கிரண் பேடி டீசல் விலை வித்தியாசம், காலாண்டு வரி வித்தியாசம் தொடர்பாக உயர் அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்து, பேருந்து கட்டணத்தை நேர்மையான முறையில் விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     அரசு இதில் பாராமுகமாக இருந்தால், அதிமுக சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai