Enable Javscript for better performance
பேருந்து கட்டண உயர்வு: மார்க்சிஸ்ட், தவாக கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து கட்டண உயர்வு: மார்க்சிஸ்ட், தவாக கண்டனம்

    By  புதுச்சேரி,  |   Published on : 20th October 2017 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:
     புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு புதிய வரி, கட்டண உயர்வுகளை மக்கள் மீது திணித்து வருகிறது. குறிப்பாக மின்கட்டணம், குடிநீர் கட்டணம், வீட்டுவரி, குப்பைவரி, புதைச் சாக்கடை இணைப்பு வரி என்று, கடுமையாக உயர்த்தியுள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் அரசின் போக்குவரத்தை மேம்படுத்தாமல், மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளுக்கு அரசு பேருந்தை இயக்காமல், தனியார் பேருந்து முதலாளிகளின் நலனுக்காக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
     இந்த கட்டண உயர்வுக்கு பின்னால், பேரம் நடந்துள்ளதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக முதல்வர் விளக்கம் அளிக்க வெண்டும். உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக். 23-முதல் ஒருவார காலத்துக்கு பிரசார இயக்கங்கள் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
     தவாக கண்டனம்: தவாக மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கடந்த 3 மாதங்களில் ஆட்டோ கட்டணம், வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பலவித வரியை மக்கள் மீது திணித்தது. தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அரசு அறிவிப்பது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார் ஸ்ரீதர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai