சுடச்சுட

  

  "காலி மனைகளில் மழைநீர் தேங்கினால் நடவடிக்கை'

  By  புதுச்சேரி,  |   Published on : 21st October 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காலி மனைகளில் நீர் தேங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி எச்சரித்துள்ளார்.
   அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
   அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பல இடங்களில் வீடுகள் கட்டப்படாமல் காலியாக உள்ளது. இந்த இடத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு, காலரா, மலேரியா போன்ற நோய்கள் பரவி வருகிறது.
   எனவே, காலி வீட்டு மனைகள் வைத்திருப்போர், வீட்டு மனைகளில் 12 நாள்களுக்குள் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் மண் கொட்டி சமன்படுத்தி, தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
   தவறும் பட்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மற்றும் 1973ம் ஆண்டு புதுச்சேரி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் கால்வாய்களில் கழிவுநீர் செல்வதற்கு தடையில்லாமல் ஒத்துழைக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai