சுடச்சுட

    

    காவல் துறையினரைக் கண்டித்து திருநங்கைகள் சாலை மறியல்

    By  புதுச்சேரி,  |   Published on : 21st October 2017 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவல் துறையினர் தாக்கியதாகக் கூறி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரவாணிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது, காவல் துறையினருடன் திருநங்கைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
     புதுச்சேரி பேருந்து நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தனராம். அவ்வாறு இடையூறு செய்த திருநங்கைகளை காவல் துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
     இதனையடுத்து காவல் துறையினரைக் கண்டித்து 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திருநங்கைகளை காவல் துறையினர் கைது செய்து அழைத்து வந்தனர்.
     இதுகுறித்து அறிந்த மேலும் 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீண்டும் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. '
     அதன் பிறகு திருநங்கைகளிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
     இதுதொடர்பாக திருநங்கைகள் கூறியதாவது: எங்களுக்கான எந்தவித உதவிகளையும் மாநில அரசு செய்யவில்லை. குறிப்பாக, உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. எனவே, எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவதை விடுத்து, எங்களை தாக்குவது, அவமானப்படுத்துவது வேதனை அளிக்கிறது என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai