சுடச்சுட

    

    சுவரொட்டி ஒட்டிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜர்

    By  புதுச்சேரி,  |   Published on : 21st October 2017 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுவரொட்டி ஒட்டப்பட்ட வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி வெள்ளிக்கிழமை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
     கடந்த 2008ஆம் ஆண்டு அமைச்சராக மல்லாடி கிருஷ்ணாராவ் இருந்தார். அப்போது அவரை விமர்சித்து புதுச்சேரி நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது பற்றி அறிந்த மல்லாடி கிருஷ்ணாராவ் புகார் கொடுத்ததையடுத்து, பெரியக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
     இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 31ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai