Enable Javscript for better performance
பல்கலை. மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு ரங்கசாமி வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    பல்கலை. மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு ரங்கசாமி வாழ்த்து

    By  புதுச்சேரி,  |   Published on : 21st October 2017 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர். காங்கிரஸ் மாணவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ந.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
     புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவை தேர்தலில் மாணவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாணவி நர்மதா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் பதவிக்கு மாணவி இலக்கியா, மாணவர் விக்னேஷ் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு மாணவர் பாலமுருகன், இணைச்செயலாளர் பதவிக்கு மாணவர் திலீப் அப்துல்கலாம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
     செயற்குழு உறுப்பினர்களான மாணவர்கள் கோகுல்சுந்தர், குணாளன், ஷில்பா கிருஷ்ணன், ஷிப்பா சன்னி, கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
     தேர்தலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 10 மாணவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் பேரவையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai