சுடச்சுட

  

  பிளாஸ்டிக் பையை அப்புறப்படுத்த வணிக நிறுவனங்களுக்குக் கெடு

  By  புதுச்சேரி,  |   Published on : 21st October 2017 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிளாஸ்டிக் பை, கப் உள்ளிட்ட பொருள்களை 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
   அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில் தேநீர் விடுதிகள், உணவு விடுதிகளில் துரித உணவகங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் அனுமதிக்கப்பட்ட தரம் மற்றும் அளவுக்கு மாறான பிளாஸ்டிக் கப், பேப்பர் கவர்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது அந்த பிளாஸ்டிக் பொருட்களால் பொதுமக்களுக்கும் அனைத்து வகையான கால்நடைகளுக்கும் பலவிதங்களில் உடல் உபாதைகளும் பாதிப்புகளும் ஏற்படுகிறது.
   ஊர் முழுவதும் பிளாஸ்டிக் கழிவு குப்பைகளாக காணப்படுகிறது. அவற்றை கழிவு நீர் செல்லும் வாய்க்கால்களில் கொட்டுவதால், அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்லாததால் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சுகாதார கேடு, டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
   மத்திய அரசின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, பிளாஸ்டிக் பொருள்களை கையாளும் வணிக நிறுவனங்களே அதனை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பு கிடைக்க பெற்ற 15 தினங்களுக்குள் தங்கள் உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் பை, கப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவோ அல்லது கழிவு பொருள்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி நீர் நிலைகளில் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai