பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல்: 250 பேர் கைது
By புதுச்சேரி, | Published on : 21st October 2017 08:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரி முத்தியால்பேட்டையில், அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தலைமையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதுதொடர்பாக 250 பேரை போலீஸார் செய்தனர்.
பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய ஆளும் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசைக் கண்டித்தும், பேருந்துக் கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் அதிமுக கொறடா வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், தொகுதி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, வையாபுரி மணிகண்டன் கூறுகையில், பண்டிகை நாளில் பேருந்துக் கட்டணத்தை 110 சதவீதம் அளவுக்கு அரசு உயர்த்தியுள்ளது. இது பேருந்து போக்குவரத்தை பெரிதும் நம்பியுள்ள ஏழை மக்கள், தொழிலாளர்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பிற மாநிலங்களை விட புதுச்சேரியில் டீசல், வாகன உதிரிப்பாகங்கள் விலையும் இருக்கை வரியும் குறைவு. எனினும், தனியார் பேருந்து
நிறுவனங்கள் கூட்டுக் கொள்ளை அடிக்கும் வகையில் அரசு இந்தப் பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த பேருந்து கட்டண உயர்வை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
மறியலில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.