Enable Javscript for better performance
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஆதரவை திரும்பப் பெற திமுக தயாரா? அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஆதரவை திரும்பப் பெற திமுக தயாரா? அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி

    By  புதுச்சேரி,  |   Published on : 21st October 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து, புதுவையில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற திமுக தயாரா என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
     இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
     புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கெனவே வரலாறு காணாத வகையில் உயர்த்தியுள்ள நிலையில் தற்போது அடித்தட்டு ஏழை மக்களைப் பாதிக்கும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திருப்பது கண்டனத்திற்குரியது. மேலும், அரசு அறிவிப்பில் 2012ஆம் ஆண்டு முடிவு செய்தபடி என்று குறிப்பிட்டிருப்பது, கடந்த அரசின் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது.
     புதுச்சேரியை விட டீசல் விலை தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையிலும் மக்களின் நலன் கருதி அங்கு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
     ஆனால், புதுவை அரசோ மக்களின் நலன் கருதாமல் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியருப்பது மறைமுகமாக தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு துணை போகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது.
     காங்கிரஸ் கட்சிக்கு எல்லா நிகழ்வுகளிலும் ஆதரவளிக்கும் தி.மு.க. பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் போராட்டம் நடத்துவோம் என்பதும் மக்களை ஏமாற்றும் செயல்.
     உண்மையிலேயே தி.மு.க.வுக்கு புதுச்சேரி மக்களின் மீது அக்கறை இருக்குமேயானால் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா?
     புதுவை காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடில் புதுவை மாநில அதிமுக சார்பில் தலைமையின் அனுமதி பெற்று பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai