Enable Javscript for better performance
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முதல்வரிடம் திமுக மனு- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முதல்வரிடம் திமுக மனு

    By  புதுச்சேரி,  |   Published on : 21st October 2017 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி, முதல்வர் நாராயணசாமியிடம் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
     புதுச்சேரி தெற்கு மற்றும் வடக்கு மாநில திமுக அமைப்பாளர்கள் இரா. சிவா, எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
     அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு ஆதரவுஅளித்தாலும் மக்கள் நலன்சார்ந்த பிரச்னைகளில் திமுக எப்போதும் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
     அவ்வாறு இருந்தும் மக்களை பாதிக்கிற வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற முடிவுகளில் கூட்டணி கட்சி என்ற முறையில் எங்களிடம் பெயரளவுக்குக் கூட கலந்து ஆலோசிக்கவில்லை. இதுபோன்று காங்கிரஸ் அரசு எடுக்கிற மக்கள் விரோத நடவடிக்கைக்கு திமுக-வும் துணை நிற்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலை மாறவேண்டும். அரசின் அறிவிப்புகள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
     புதுச்சேரி மக்கள் ஏற்கெனவே ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பண்டிகை நாளை கசப்படையச் செய்யும் வகையில் பேருந்து கட்டணத்தை அதிகளவு உயர்த்தி வெளியான அறிவிப்பு, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
     ஆட்டோ கட்டண உயர்வு போல, பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக திமுகவுடன் ஆலோசிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட இந்த பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இது சம்பந்தமாக கூட்டணி கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்து பேச வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     அவைத்தலைவர்கள் சீத்தா. வேதநாயகம், வழக்குரைஞர் பலராமன், துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், ஏ.கே.குமார், கலிய
     பெருமாள், பொருளாளர் செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, பிரபாகரன், தொகுதிச் செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், தங்கவேலு, சவுரிராஜன், சிவக்குமார், செல்வபார்த்திபன், பல்வேறு அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
     பின்பு செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. சிவா கூறியதாவது:
     ஆளும் காங்கிரஸ் அரசுடன் திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்களை பாதிக்கக்கூடிய செயல்களை அரசு செய்தால் எதிர்ப்போம். தற்போது பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ள பேருந்துக் கட்டண உயர்வால் கிராமப்புற மக்கள், மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
     உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை மறு பரிசீலனை செய்யாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai