சுடச்சுட

  

  புதுச்சேரி கோரிமேடு ஆயுதப் படை காவல் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் முதல்வர் வி.நாராயணசாமி கலந்து கொண்டு காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
  காவல் துறையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர்களின் நினைவாக வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. திபெத் எல்லையில்
  1959-ஆம் ஆண்டு நடைபெற்ற சண்டையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 காவலர்கள் வீர மரணமடைந்தனர். பலர் காணாமல் போனார்கள்.
  இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவையில் நடைபெற்றது.
  கோரிமேடு ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் உயிரிழந்த காவலர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
  அவரைத் தொடர்ந்து, காவல் துறை டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
  தொடர்ந்து, உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
  முதுநிலை எஸ்.பி.க்கள் ராஜீவ் ரஞ்சன், அபூர்வா குப்தா, எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் துறையினர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai