Enable Javscript for better performance
பெண்ணிடம் பணம் பறிப்பு: இரு சிறுவர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் பெண்ணை வழிமறித்து ரூ. 50 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ற இரு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
    முத்தியால்பேட்டை செந்தாமரை நகரைச் சேர்ந்தவர் அப்துல் முனாப். கோழிக் கடை வைத்துள்ளார். இவரின் மனைவி நசீமா பேகம். இவர், கடந்த
    18-ஆம் தேதி கடைக்கு தனது கைப்பையில் ரூ. 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, நடந்து
    சென்றார்.
    அப்போது, பைக்கில் வந்த
    2 பேர் நசீமாவின் கைப்பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து நசீமா பேகம் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    விசாரணையில், திலாஸ்பேட்டை, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த இரு சிறுவர்கள் நசீமா பேகத்திடம் பணம் பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai