சுடச்சுட

  

  பேருந்துக் கட்டண உயர்வுக்கான மானியத்தை அரசே ஏற்க வேண்டும்: அதிமுக

  By DIN  |   Published on : 22nd October 2017 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பேருந்துக் கட்டண உயர்வுக்கான மானியத்தை அரசே ஏற்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
  இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமிக்கு அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
  சட்டப்பேரவையில் கூடி விவாதிக்காமல் பேருந்துக் கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தி அறிவித்தது புதுச்சேரி மக்களையும், அதிமுகவையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அதிமுக போராட்டங்களை நடத்தியது. இதையேற்று பேருந்துக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக அரசு கூட்டம் நடத்தியுள்ளது.
  வசதி படைத்தவர்கள் செல்லும் விமானப் போக்குவரத்துக்கு பல கோடியை அரசு மானியமாக அளித்து வருகிறது. ஆனால், ஏழை மக்கள் பயன்படுத்தும் பேருந்துப் போக்குவரத்துக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  எனவே, அறிவிக்கப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். டீசல் விலையேற்றம், உதிரிப் பாகங்கள் விலையேற்றம் காரணமாகப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது அவசியம் என தனியார் பேருந்து உரிமையாளர்களின் வேண்டுகோள் நியாயமானதாக இருந்தால் கட்டண உயர்வை அரசே ஏற்றுக்கொள்வதில் அதிமுகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
  ஆனால், அந்தக் கட்டண உயர்வை ஏழை மக்களின் நலன் கருதி அரசே மானியமாக செலுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai