Enable Javscript for better performance
லாஸ்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு முகாம்: முதல்வர், அமைச்சர்கள்பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    லாஸ்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு முகாம்: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 22nd October 2017 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை வருவாய்த் துறை, நலவழித் துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகியவை சார்பில், லாஸ்பேட்டை பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    இந்த முகாமில் முதல்வர் நாராயணசாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ், பேரவைத் துணைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    முகாமில், டெங்கு பரவும் விதம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், டெங்கு கொசுக்கள் உருவாவதற்கான காரணம்,  அதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
    முகாமில்,  500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு லாஸ்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று டெங்கு குறித்தும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai