சுடச்சுட

    

    வங்கி அதிகாரியிடம் பணப்பையைப் பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    ஒதியஞ்சாலை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ரேணு சரண் பிலிப் 29. இவர், கனரா வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை தனது காரில் ஒதியஞ்சாலை பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றார். காரை நிறுத்திவிட்டு தனது கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கியபோது,  பைக்கில் 2 பேர் அவரின் கைப்பையைப் பறித்துக் கொண்டு தப்பினர். அந்தப் பையில் செல்லிடப்பேசி,  
    ரூ. 2,500 ரொக்கம்,  ஏடிஎம் கார்டு உள்ளட்டவை இருந்தன. இதுகுறித்து பிலிப் கொடுத்த புகாரின் பேரில்,  ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai