சுடச்சுட

  

  வில்லியனூர் அருகே வீடு புகுந்து நகையைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  வில்லியனூர் மேல் சாத்தமங்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (31). . இவரது மனைவி ரேவதி (29). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. குழந்தையை தாத்தாவிடம் வீட்டில் விட்டுவிட்டு, இருவரும் வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.
  கடந்த இரு தினங்களுக்கு ரேவதி வீட்டைச் சுத்தம் செய்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 2.5 பவுன் நகையை வெளியில் எடுத்து வைத்துவிட்டு மறந்துவிட்டாராம். பின்னர், வேலைக்குச் சென்று வீடு திரும்பிய போது, மர்ம நபர்கள் தோட்டத்து வழியாக  வீட்டுக்குள் புகுந்து நகையைத் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது.
  இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai