சுடச்சுட

    

    புதுச்சேரி முருக பக்தர்கள் நற்பணி மன்றம் சார்பில், வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோயிலில், கந்தசஷ்டி கூட்டுப் பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
    இசைவாணர் முருகேச கந்தசாமி, சரோஜினியின் மங்கல இசை நடைபெற்றது. பின்னர், அருணகிரிநாதர் புகழ் மன்றத்தின் தலைவர் ரத்தின ஜனார்த்தனன் பாராயணத்தைத் தொடக்கி வைத்தார்.  கோயில் நிர்வாகி ஜி.பழனிராஜா முன்னிலை வகித்தார். மன்ற நிர்வாகிகள் கலியமூர்த்தி, வாசுதேவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மன்றச் செயலர் கொல்பேர் ஜெயபாலன் நன்றி கூறினார். ஒரே நாளில் 36 முறை கூட்டுப் பாராயணம் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai