சுடச்சுட

    

    புதுச்சேரி  சுற்றுலாத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ  மாணவிகள் பங்கேற்றனர்.
    புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சார்பில்,  ஆண்டுதோறும் சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் உயர்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.
    இந்த ஓவியப் போட்டியில், புதுச்சேரியின் சிறப்புமிக்க சுற்றுலா இடங்கள் , படகு குழாம், விமான சேவை உள்ளிட்டவற்றை மாணவர்கள் ஓவியமாக வரைந்தனர். சுற்றுலாத் துறை இயக்குநர் முனிசாமி போட்டியைத் தொடக்கிவைத்தார்.
    இந்தப் போட்டியில், 276 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர்.
    போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களுக்கு வருகிற 25 - ஆம் தேதி கடற்கரை காந்தி சிலை அருகே பரிசுகள் வழங்கப்படும். முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பரிசுகளை வழங்கவுள்ளார்.  இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை அதிகாரிகள், மாநில ஓவியர் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai