சுடச்சுட

  

  பஞ்சாலைகளை புனரமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்:  மார்க்சிஸ்ட் கோரிக்கை

  By DIN  |   Published on : 23rd October 2017 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் உள்ள 3 பஞ்சாலைகளையும் புனரமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
   அந்தக் கட்சியின் புதுவை நகர கமிட்டியின் 22-ஆவது மாநாடு அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  கே.ராஜமாணிக்கம் கொடியேற்றினார். ஜி.சந்திரா வரவேற்றார். ஆர்.சரவணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள் தொடக்கவுரை ஆற்றினார். நகர கமிட்டி செயலர் எம்.பி.மதிவாணன் செயலறிக்கையையும், எம்.கலியமூர்த்தி வரவு - செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனர். நிர்வாகிகள் தா.முருகன், சு.ராமச்சந்திரன் ஜி.சீனுவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம் நிறைவுரை ஆற்றினார்.
  மாநாட்டில்,  அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடை மூலமாக 28 விதமான பொருள்களை வழங்க வேண்டும். புதுவையில் உள்ள 3 பஞ்சாலைகளையும் புனரமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து, தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையைத் தடுக்க வேண்டும். புதுவை அரசுப் பொது சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
  கட்சி நிர்வாகிகள் ஜோதிபாசு, கே.மணவாளன், அழகர்ராஜ், சிவக்குமார் தீர்மானங்களை வாசித்தனர். ஜெ.ஜெகதீசன் நன்றி கூறினார்.
  மண்ணாடிப்பட்டு கொம்யூன் மாநாடு:  திருக்கனூர் பிடல் காஸ்ட்ரோ நினைவரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ராமமூர்த்தி, விநாயகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
  பிரதேசக் குழு உறுப்பினர் கலிவரதன் கொடியேற்றினார். கட்சியின் பிரதேசச் செயலர் ஆர்.ராஜாங்கம் மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலர் உலகநாதன் பணி அறிக்கையைச் சமர்ப்பித்தார். செயற்குழு உறுப்பினர் ஜி.ராமசாமி வாழ்த்திப் பேசினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள் நிறைவுரையாற்றினார்.
  புதிய கொம்யூன் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கொம்யூன் செயலாளராக ஆர்.அன்புமணி, உறுப்பினர்களாக உலகநாதன், சங்கர், ஆனந்தன், விநாயகம், ராமமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, முத்து, ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  மாநாட்டில், மதகடிப்பட்டு கால்நடை வாரச் சந்தையை மேம்படுத்தி, அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும். 100  நாள்கள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக உயர்த்தி, அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க  வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai