சுடச்சுட

  

  புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  பள்ளி முதுநிலை முதல்வர் எஸ்.ஏ.லூர்துசாமி தலைமை வகித்தார். முதல்வர் அன்டோனிஸ் பிரிட்டோ வரவேற்றார். தமிழக அரசின் பொருளாதாரத் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு, சாய்ராம் கல்விக் குழும இயக்குநர் மாறன், ஜெயராம் ஹோட்டல் மேலாளர் சுந்தர லக்குமி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
  பேராசிரியர் மாறன் பிளஸ் 2 முடித்த பின்னர் என்னென்ன துறைகளில் சேர்ந்து படிக்கலாம், அதற்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.
  முனைவர் இறையன்பு உயர்கல்வி தொடர்பாக மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்து, கடந்த 2016-17 கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும், ஒவ்வோர் பாடப் பிரிவிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் தங்கப் பதக்கங்களை வழங்கினார். மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai