சுடச்சுட

    

    புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடைவிடாத இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    புதுவையில் கடந்த சில நாள்களாகக் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.  தென்மேற்கு பருவமழைக் காலம் முடிந்த நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன.  இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு புதுச்சேரியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மழை விட்ட நிலையிலும் இடைவிடாத இடி, மின்னல் தொடர்ந்து நீடித்தது. பலத்த மழையால் புதுச்சேரியின்  தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai