Enable Javscript for better performance
மூன்று ரெளடிகள் கொலை வழக்கு: எதிரிகளை கைது செய்ய முடியாமல்போலீஸார் திணறல்- Dinamani

சுடச்சுட

    

    மூன்று ரெளடிகள் கொலை வழக்கு: எதிரிகளை கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறல்

    By DIN  |   Published on : 23rd October 2017 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் நிகழ்ந்த 3 ரெளடிகள் கொலை வழக்கில் எதிரிகளை கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம் ராம் நகரில் கடந்த 18-ஆம் தேதி இரவு ரெளடிகள் நாய் சேகர், ஜெரால்டு, சதீஷ் ஆகியோர் மர்மக் கும்பலால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.
    இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார்  மார்ட்டின் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க நான்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு,  தமிழகம், புதுச்சேரியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ரெளடி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்திருப்பதும் தெரிய வந்தது. எனவே, கொலையாளிகள் யார் யார் என்ற விவரங்களையும், அதற்கான ஆதாரங்களையும் போலீஸார் திரட்டி வருகின்றனர்.
    ஆனாலும், கொலையாளிகள் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், அவர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai