சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை தட்டாஞ்சாவடியில் உள்ள கட்டடத் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  மத்திய அரசின் வரைவு சமூக பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், செஸ் வரியை பாதுகாக்க வேண்டும், இஎஸ்ஐ மற்றும் ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், விடுபட்ட மழைக்கால நிவாரணத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  சங்கத் தலைவர் பாலையா தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் கே.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் செல்வராசு, பொருளாளர் தீர்த்தமலை, இணைச் செயலர்கள் கதிரவன், ராஜேந்திரன் உள்பட பலர்
  பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai