சுடச்சுட

  

  ஜிப்மர் நலவழிக் கல்வியின் இயக்கத்தின் சார்பில் பக்கவாதம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
  இந்த கலந்துரையாடல் மூலம் பக்கவாதம் பற்றிய தகவல்கள் மற்றும் தடுக்கக் கூடிய வழிமுறைகள் பற்றி பொது மருத்துவத்துறை மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் துறை மருத்துவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  இக்கலந்தாய்வு ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகம் 3-வது மாடி கருத்தரங்கக் கூடத்தில் பிற்பகல் 2:30 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறும். கலந்தாய்வில் கலந்துகொள்ள கட்டணமோ, முன்பதிவோ தேவையில்லை.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai