சுடச்சுட

  

  ஜிப்மர் தினக்கூலி ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

  By DIN  |   Published on : 24th October 2017 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீதிமன்ற உத்தரவுப்படி, தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  12 ஆண்டுகள் ஜிப்பரில் தினக்கூலி ஊழியர்களாகப் பணிபுரிந்த பிறகு, 2012-இல் ஒரு பகுதி தினக்கூலி ஊழியர்களை ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிபுரியுமாறு ஜிப்மர் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. மொத்தம் 550 பணியாளர்கள் இரு ஒப்பந்ததாரர்களின் கீழ் செயல்பட அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
  சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி, சென்னை தொழிலாளர் நல நீதிமன்றம் கடந்த ஜூலை 17-இல் தீர்ப்பு வழங்கியது. அதில் ஐந்து ஆண்டுகள் பணிநிறைவு செய்த தொழிலாளர்களை நிரந்தர நான்காம் நிலை ஊழியர்களாகப் பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தீர்ப்பு வந்து 3 மாதங்களாகியும் ஜிப்மர் நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
  இந்த நிலையில், ஜிப்மரில் உள்ள 3 தனியார் ஒப்பந்ததாரர்களிடம் 2012-க்குப் பிறகு பணியாற்றும் 5 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஊழியர்களையும் நிரந்தர பணிமாற்றம் செய்ய வேண்டும். காவலாளி பணியில் உள்ள தினக்கூலி ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தனியார் ஒப்பந்ததாரர்களை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தினக்கூலி ஊழியர்கள் சங்க கெளரவத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
  பொதுச் செயலாளர் பாஸ்கரன், தலைவர் சிவசங்கர் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
  பின்னர், வரும் 28-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என சங்க நிர்வாகிகள் எச்சரித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai