சுடச்சுட

  

  நாராயணசாமி அரசின் நிர்வாக திறமையின்மையைக் கண்டித்து போராட்டம்: ஓம் சக்தி சேகர் அறிவிப்பு

  By DIN  |   Published on : 24th October 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதல்வர் நாராயணசாமி அரசின் நிர்வாகத் திறமையின்மையை கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் தெரிவித்தார்.
  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
  புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு பல்வேறு மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் திணறி வருகிறது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்ற நாள் முதல் திறமையில்லாத காரணத்தால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.
  யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆளுநருக்குத்தான் அதிக அதிகாரம் என்பதை மறந்து, அவரோடு மோதல் போக்கில் ஈடுபட்டு, சீராக செல்ல வேண்டிய அரசு நிர்வாகத்தை முற்றிலுமாக ஸ்தம்பிக்க செய்துவிட்டார்.
  தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தையும், மருத்துவ கல்லூரி மாணவர்களையும் ஏமாற்றி பின்னர் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீரமானம் நிறைவேற்றி அதுவும் செல்லுபடியாகாமல் போனது. யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தனது அமைச்சரவை சகாக்களை கேட்காமல், கூட்டணி கட்சியினரை மதிக்காமல் கட்டாய தலைக்கவச திட்டத்தை அறிவித்து, புதுச்சேரி மக்களின் எதிர்ப்பினால் அந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
  வீட்டு வரியை உயர்த்தி பொதுமக்களை இன்னல்களில் சிக்க வைத்து மக்களின் எதிர்ப்பை பெற்றுக் கொண்டார். மேலும், மின்சார கட்டணத்தை பெருமளவில் உயர்த்தியுள்ளார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களின் தீவிர எதிர்ப்பினால் கட்டண உயர்வை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
  முதல்வர் நாராயணசாமி தான் வெற்றி பெற்ற நெல்லித்தோப்பு தொகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் ஏற்படுத்தித் தராமல் இருக்கின்றனர்.
  அதிமுக சார்பில் எங்கள் தலைமையின் அனுமதி பெற்று முதலமைச்சர் நாராயணசாமியின் நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் ஓம் சக்தி சேகர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai