சுடச்சுட

    

    புதுச்சேரி முதலியார்பேட்டையில் இளைஞரை மர்ம கும்பல் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
    முதலியார்பேட்டை உடையார் தோட்டத்தைச் சேர்ந்தவர்
    செல்வம் (32 ). இவர் திங்கள்கிழமை தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் தலையில் வெட்டி விட்டு தப்பியது.
    இதில் பலத்த காயமடைந்து விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து எதிரிகளை தேடி வருகின்றனர்.
    இதுதொடர்பாக காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: சீர்காழி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் மூர்த்தி கொலை வழக்கில் செல்வம் முக்கிய குற்றவாளி ஆவார். அவர் மீது மேலும் பல வழக்குகள் உள்ளன. அவரை கொலை செய்த கும்பல் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கொலை செய்யப்பட்ட செல்வத்துக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai