Enable Javscript for better performance
மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே டெங்கு பாதிப்பை தடுக்க முடியும்: அமைச்சர் ஷாஜகான்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே டெங்கு பாதிப்பை தடுக்க முடியும்: அமைச்சர் ஷாஜகான்

    By DIN  |   Published on : 24th October 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே டெங்கு பாதிப்பை தடுக்க முடியும் என வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜஹான் கூறினார்.
    டெங்கு பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நில வேம்புக் குடிநீர் வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை ரெட்டியார்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
    இதில் அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நில வேம்புக் குடிநீர் வழங்கினார். பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க பெரிய அளவில் துப்புரவு பணிகளை மேற்கொள்வது, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது.
    காலி மனைகளில் தேங்கும் மழைநீரும் கொசு உற்பத்திக்கு முக்கிய இடமாக உள்ளது. இதனால் காலி மனைகளை சுத்தமாக வைத்திருக்க மனைகளின் உரிமையாளர்களுக்கு காலக்கெடு வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த காலக்கெடுவிற்குள் அவர்கள் தங்களது மனைகளை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அரசே சுத்தம் செய்து, அதற்கான கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்கும். மேலும் சட்ட நடவடிக்கையும் எடுக்கும்.
    சாக்கடை நீரில் பைலேரியாவை பரப்பும் கொசுக்களும், நல்ல நீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களும் உற்பத்தி ஆகின்றன. எனவே, எந்த நீரும் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை அரசுடன் மக்களும் சேர்ந்து ஒத்துழைத்தால்தான் கட்டுப்படுத்த முடியும்.
    புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக, மிக குறைவு. மேலும், தமிழகத்தில் இருந்துதான் 50 சதவீதம் பேர் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.
    பாலன் எம்எல்ஏ, சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai